அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கம் - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

 
stalin

போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழிப்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.

drugs

தமிழகத்தில் போதை பொருட்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.  இதன் காரணமாக இளைய சமுதாயத்தினர் கடுமையாக போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.  அத்துடன் போதை பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் பல  குற்ற சம்பவங்களும் தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கிவிட்டன.  எனவே போதை பொருள் புழக்கத்தை தடுப்பது குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை  எடுத்து வருகிறது.

drug heroin

இந்நிலையில் போதைப்பொருட்கள் விற்பனை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.  சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார். முன்னதாக போதைப் பொருள் கும்பல் இலங்கையில் இருந்து தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.