கனமழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு

 
mk stalin

வரலாறு காணாத மழையால் சீர்காழி குட்டி தீவு போல மாறியுள்ள நிலையில், நாளை மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். 

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.  குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் சென்னையில் மழை வெளுத்து வாங்கியுள்ளது. சென்னையில் மழை பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். ஓட்டேரி நல்லா கால்வாய், ஸ்டீபன்சன் சாலையில் மேம்பால பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். முன்னதாக சென்னை திரு.வி.க நகர் மண்டல அலுவலகத்தில் நீர்நிலை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொசுவலைகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். கொளத்தூர் தொகுதியில் நீர்நிலை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொசுவலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.  

mk stalin

இதேபோல் சீர்காழியிலும் வரலாறு காணாத மழையால் குட்டி தீவு போல் மாறியுள்ளது. அதி கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது மட்டுமின்றி வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது. பயிர்கள் கடுமையான சேதம் அடைந்துள்ளது. கனமழையால் சீர்காழியில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அங்கு ஆய்வு செய்யவுள்ளார். வெள்ளத்தை பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிகிறார்.