தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை

 
stalin

வடகிழக்கு பருவமழை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார். 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கி இருக்கிறது.  இன்று முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. நேற்று முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கன மழை பெய்து வருவதால் தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  இரண்டு மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் கனமழை மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் கனமழையால் சென்னையில்  இருவர் உயிரிழந்தனர். 

இந்தநிலையில், வடகிழக்கு பருவமழை நடவடிக்கைகள் குறித்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல் அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர், துறை சார் செயலாளர்கள், அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோரும் பங்கேற்பு அனைத்து மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்