ராணிப்பேட்டை சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர் இரங்கல்!

 
stalin

 ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். 

tn

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நேற்று (1.8.2022) மாலை 5 மணியளவில், சோளிங்கர் - அரக்கோணம் சாலை, SR கண்டிகை மின்னலம்மாள் கோவில் எதிரே சாலையோரம் நின்றிருந்த புதூர் கண்டிகையைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 45) மற்றும் அங்கு சாலையில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த SR கண்டிகை கிராமத்தை சேர்ந்த உண்ணாமலை (வயது 45), கன்னியப்பன் (வயது 65) ஆகியோர் மீது அவ்வழியாக சென்ற கார் எதிர்பாராத விதமாக மோதியதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

rajinikanth and cm stalin

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூபாய் இரண்டு இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.