இன்று முதல் தொடங்குகிறது சென்னை சங்கமம் விழா

 
tn

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தீவு திடலில் இன்று மாலை 5 மணிக்கு சென்னை சங்கமம் விழாவை தொடங்கி வைக்கிறார்.  இந்த நிகழ்ச்சியில் திமுக துணை பொதுச்செயலாளரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தொழில்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டர் பங்கேற்கின்றனர்.

tn

சென்னை சங்கமம் நிகழ்ச்சி கடந்த திமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது.  இதன் மூலம் ஆயிரக்கணக்கான கலைஞர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு நமது பாரம்பரிய நாட்டியம் ,நாடகம் ,நடனம் ஆகியவை ஒரே இடத்தில்  மக்களின் கண்களுக்கு விருந்தாக படைக்கப்பட்டது.  கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை.  திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 11 ஆண்டுகள் கழித்து மீண்டும் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

tn

 இந்நிகழ்ச்சியை முழுக்க முழுக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் 600 க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் பங்கேற்கும் விதமாக அமைய பெற்றுள்ளது.  சென்னையில் செம்மொழி பூங்கா, பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை உள்ளிட்ட 18 இடங்களில் நாளை முதல் 17ஆம் தேதி வரை நிகழ்ச்சிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.  இந்நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை நகர மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் உணவு திருவிழாக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.