ரூ. 181.3 கோடி மதிப்பில் பள்ளிக் கட்டிடங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..

 
ரூ. 181.3 கோடி மதிப்பில் பள்ளிக் கட்டிடங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில்  ரூ.181 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை கட்டடங்களை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.   

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (5.5.2022) தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் நபார்டு திட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம், மாவட்ட கனிமவள நிதி ஆகியவற்றின் வாயிலாக 181 கோடியே 3 இலட்சத்து 94 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 208 அரசு பள்ளிக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதிகள், கழிவறைகள், சுற்றுச்சுவர் மற்றும் மாவட்ட ஆசிரியர் மற்றும் கல்வி நிறுவனக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

தலைமைச் செயலகம்
 
அந்த வகையில், நபார்டு திட்டத்தின் கீழ் அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், பெரம்பலூர், இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, நீலகிரி, தூத்துக்குடி, திருப்பத்தூர், திருப்பூர், திருவள்ளூர், திருவாரூர், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 66 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 110 கோடியே 3 இலட்சத்து 56 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், ஆய்வகக் கட்டடங்கள், சுற்றுச்சுவர், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.  

ஸ்டாலின்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ், அரியலூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, இராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 140 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 68 கோடியே 88 இலட்சத்து 98 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் தொடங்கி வைத்தார்.  

ரூ. 181.3 கோடி மதிப்பில் பள்ளிக் கட்டிடங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..

மாவட்ட கனிமவள நிதியின் கீழ், தருமபுரி மாவட்டம், காரிமங்கலம், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 1 கோடியே 70 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 10 வகுப்பறைக் கட்டடம் மாவட்ட ஆசிரியர் மற்றும் கல்வி நிறுவன நிதியின் கீழ், கரூர் மாவட்டம், மாயனூரில் 40 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆசிரியர் ஓய்வு அறை மற்றும் சுற்றுச்சுவர் போன்றவற்றை திறந்து வைத்தார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.