தமிழகத்தில் எவ்வளவு மழை பெய்தாலும் சமாளிப்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

 
stalin

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனம் தேவையில்லை, பொதுமக்களின் பாராட்டே போதும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக  கோயம்பேடு, மதுரவாயல், வானகரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சாலையில் ஆங்காங்கே மழை நீர், குளம் போல் தேங்கியுள்ளது. 

mk stalin

இந்நிலையில், சென்னையில் மழை பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். ஓட்டேரி நல்லா கால்வாய், ஸ்டீபன்சன் சாலையில் மேம்பால பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். முன்னதாக சென்னை திரு.வி.க நகர் மண்டல அலுவலகத்தில் நீர்நிலை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொசுவலைகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். கொளத்தூர் தொகுதியில் நீர்நிலை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொசுவலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.  

மழை பாதிப்புகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: தமிழகத்தில் எத்தனை மழையையும் சமாளிப்போம்; அரசின் பணிகளை மக்களே பாராட்டுகிறார்கள்; சென்னை மாநகராட்சியும் பொதுப் பணித் துறையும் இணைந்து செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகளின் விமர்சனம் தேவையில்லை, பொதுமக்களின் பாராட்டே போதும். இவ்வாறு கூறினார்.