1000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

 
karur

கரூரில் 1000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூரில் இன்று தொடங்கி வைத்தார். 

ஈரோடு மற்றும் கரூர் மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முற்பகலில் கோவைக்கு சென்றார். தனி விமானத்தில் கோவை சென்றடைந்த அவருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட திமுகவினர் உற்காக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து ஈரோட்டிற்கு சென்ற முதலமைச்சர் அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதனையடுத்து இன்று கரூரில் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கரூர் மாவட்டத்தில் ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். 

பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது; மண் காக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதால் என் மனதும் குளிர்ந்துள்ளது. தமிழக அரசின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் நாள் இந்த நாள் .இதற்கு முன் எந்த அரசும் இப்படியொரு சாதனையை செய்தது கிடையாது. ஒரு லட்சம் இலவச மின் இணைப்பு சாத்தியமா? என்று கேட்டார்கள். முடியுமா? என்பதை முடித்து காட்டுவதுதான் திமுக. தமிழ்நாட்டில் விலைவாசி குறைவாக உள்ளது: பணப்புழக்கம் அதிகரித்துள்ளது .தமிழ்நாட்டில் வாழ்க்கை தரம் நிலையானதாக உள்ளது. இவ்வாறு கூறினார்.