மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
MK Stalin

தென் சென்னை பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை முதலே தென் சென்னை பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்து வருகிறார். முன்னதாக காலையில் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வரும் பன்னோக்கு மருத்துவமனை கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.  இந்த ஆய்வின் போது தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, சென்னை மேயர் பிரியா மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

இதனை தொடர்ந்து ஆதம்பாக்கம் சிட்டி லிங்க் சாலை, நேதாஜி சாலை, ஐந்து பர்லாங் சாலை உள்ளிட்ட 6 சாலைகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது வரைபடம் மூலம் முதலமைச்சருக்கு அதிகாரிகள் விளக்கமளித்தனர். இந்த ஆய்வின் போது சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளனர்.