காமன்வெல்த் - பதக்கம் வென்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

 
stalin

காமன்வெல்த் விளையட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய அணி வீரர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் கடந்த 28ம் தேதி தொடங்கியது.  72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.  இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர்.  கடந்த 3 நாட்களாக நடைபெற்ற போட்டியில் இந்தியா பளுதூக்கும் போட்டியில் மட்டும் 4 பதங்கங்களை வென்றுள்ளது. அதாவது பளுதூக்குதல் போட்டியின் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்க பதக்கமும், 55 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை பிந்தியாராணி தேவி வெள்ளிப் பதக்கமும் வென்றனர். இதேபோல் ஆண்களுக்கான 55 கிலோ எடைப் பிரிவில் சங்கேத் மகாதேவ் சர்க்கார் வெள்ளிப் பதக்கமும், 61 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரா் குருராஜா பூஜாரி வெண்கல பதக்கமும் வென்றனர். இவ்வாறு 4 பதக்கங்களுடன் இந்தியா காமன்வெல்த் பதக்கப் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. 


இந்நிலையில், காமன்வெல்த் விளையட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய அணி வீரர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவிற்க்கு சிறப்பான தொடக்கம் அமைந்துள்ளது. பளுதூக்கும் வீரர்கள் தங்களின் அபார முயற்சியால் பதக்க பட்டியலில் இந்தியாவை தூக்கி நிறுத்தியுள்ளன்னர். காமன்வெல் போட்டியில் கலந்துகொண்டுள்ள இந்திய அணி மேலும் சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார்.