மேற்கு தொடர்ச்சி மலையில் ரூ.7 கோடியில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா - முதலமைச்சர் அறிவிப்பு

 
stalin

திருநெல்வேலி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் 7 கோடி ரூபாய் செலவில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

நெல்லையில் இன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு 156 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலதிட்டங்களை துவங்கி வைத்ததோடு, உதவிகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 
நெல்லை மாவட்டம் பல்வேறு வரலாற்று பெருமைகளை கொண்டுள்ளது. இலக்கியம், கலை, வரலாறு, வீரம், ஆன்மிகம் என அனைத்திற்கு பெயர் பெற்றது நெல்லை மாவட்டம். நெல்லை மாவட்டத்திற்கு ஈரடுக்கு பாலத்தை கட்டிக் கொடுத்தவர் கருணாநிதி.   மேற்கு தொடர்ச்சி மலையில் 7 கோடி மதிப்பில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும்.களக்காட்டில் அனைத்து வசதியுடன் கூடிய வாழை ஏலம் மையம் அமைக்கப்படும். விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் ராதாபுரத்தில் புதிய கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும். நெல்லை நகரத்திற்கு மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்படும்.  

mk stalin

திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த மகளிர் இலவச பேருந்து, விவசாயிகள் இலவச மின்சாரம் அனைத்தும் சிறப்பாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
 கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இப்போது கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. வ.உ.சி பெருமைப்படுத்தும் வகையிலான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. காலனி பழங்குடியின மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பட்டா வழங்கப்பட்டுள்ளது.கிராமபுறங்களிலும் தொழில் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.