#Breaking சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு!

 
tn

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக 2020-21 ஆம் கல்வியாண்டுக்கான பொது தேர்வு இரண்டு அமர்வுகளாக சிபிஎஸ்இ நடத்தியது.  முதல் அமர்வில் 50% பாடத்திட்டங்களில் இருந்து கொள்குறி வகை வினா - விடை மூலம் மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட்டனர்.  தேர்வு முடிவுகள் முன்னரே அறிவிக்கப்பட்டது.  ஏப்ரல் மாதம் தொடங்கிய  இரண்டாவது அமர்வு எழுத்துத் தேர்வுவாக  நடைபெற்றது. 

cbse exams

 இதில் புறநிலை வகை வினாக்களும் , அகநிலை வினாக்களும் இடம் பெற்றன.  இரண்டு அமர்வுகளிலும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் செயல்பாடு உள் மதிப்பீட்டு அடிப்படையிலும் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது.  இருப்பினும் சிபிஎஸ்இ பொது தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்து வந்தது. கடந்த வாரமே சிபிஎஸ்இ பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாணவர்கள்  முடிவுக்காக காத்திருந்தனர்.  

tn

இந்நிலையில் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.மாணவர்கள் தேர்வு முடிவுகளை http://cbse.results.nic.in என்ற இணையதளத்தில் சென்று காணலாம். தேர்வெழுதிய மாணவர்களில் 92.71% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மத்திய இடைநிலை கல்வி வாரியம் வெளியிட்டுள்ள நிலையில் மாணவர்கள் தங்களின் பதிவு எண், பள்ளி குறியீடு, பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் உற்சாகத்தை  ஏற்படுத்தியுள்ளது.