காவல்துறை மீதான புகார்களை விசாரிக்க சிபிசிஐடிக்கு அதிகாரம்

 
Police

காவல்துறைக்குள் வரும் துறை ரீதியான புகார்கள் தொடர்பாக சிபிசிஐடி விசாரிக்கும் அதிகாரத்தை வழங்கியது தொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Government of Tamil Nadu | LinkedIn

தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்த சட்டம் கடந்த 2013 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.இது  தொடர்பான விதிமுறைகள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசியலில் மாநில பாதுகாப்பு கமிஷன் வருடத்திற்கு ஒருமுறை கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கமிஷன் எவ்வாறு செயல்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழக காவல்துறையில் பணியிடம் மாற்றம்  மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை செயல் அமைப்பு கமிட்டி குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏடிஜிபி நிர்வாகம் மற்றும் ஏடிஜிபி சட்ட ஒழுங்கு ஏடிஜிபி உளவுத்துறை ஆகியோர் இந்த கமிட்டியில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேபோல் ஐஜி தலைமையிலான துணை கமிட்டிகளும் மண்டல வாரியாக கமிட்டிகளும் சரகவாரியாக கமிட்டிகளும் அமைப்பது தொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை பெருநகரத்திற்கு தனியாக கமிட்டி அமைப்பது தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசியலில் முக்கியமாக காவல்துறையில் உள்ள துறையரீதியான புகார்களை சிபிசிஐடி விசாரிப்பதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. காவல்துறையில் அந்தந்த மாவட்டத்தில் மற்றும் மாநகரத்தில் துறை ரீதியான புகார்களை அங்கிருக்கும் காவல்துறை உயர் அதிகாரிகளில் விசாரணை நடத்துவர். தற்போது இந்த அரசிதழ் படி சிபிசிஐடி போலீசாரிடம் காவல்துறை புகார் பிரிவில் புகார் ஆனது அனுப்பப்பட்டு விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக 6 மாதத்தில் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அந்தந்த மாவட்டத்தில் உள்ள சிபிசிஐடி கிளையில் புகார்கள் பெறப்பட்டு விசாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த புகார்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு ஓய்வு பெற்ற காவல் துறை உயர் அதிகாரிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அதற்குண்டான காரணத்தை உரிய முறையில் கூறி தமிழக டிஜிபி இடம்  அனுமதி பெற பரிந்துரை செய்யப்பட  வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக டிஜிபி அரசிடம் பரிந்துரை செய்து அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது