விரைவில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் இடைத்தேர்தல்

 
ட்ம்

 


 ஈரோடு கிழக்குத் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது என்ற தகவல் பரவுகிறது.

தி

 ஈரோடு கிழக்குத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் திருமகன் ஈவெரா.   காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழ் மாநில தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா .   இவர் கடந்த நாலாம் தேதி அன்று உடல் நலக்குறைவினால் உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் காங்கிரஸ் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

46 வயதில் திருமகன் உயிரிழந்தது அவரது தந்தை இளங்கோவனுக்கு பேரிடியாக இருந்திருக்கிறது. அதனால்தான் நான் போய் அவன் இருந்திருக்க கூடாதா என்று கவிஞர் வைரமுத்துவிடம் கண்ணீர் விட்டிருக்கிறார்.

திருமகன் மறைவுக்கு  தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர்.  

 திருமகன் மறைவை முன்னிட்டு ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக  தேர்தல் ஆணையத்திற்கு தமிழக அரசு  தகவல் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.   இதனால் ஆறு மாதத்திற்குள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று தகவல் பரவுகிறது.