ஈரோடு கிழக்கு தொகுதியில் 6 மாதத்தில் இடைத்தேர்தல் - சத்தியபிரதா சாகு அறிவிப்பு

 
sahu

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அடுத்த ஆறு மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு அறிவித்தார். 

ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும் ,  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான  திருமகன் ஈவேரா எம்எல்ஏ மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு வயது (46) .  எம்எல்ஏ திருமகனின் மரணம் அரசியல் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ், சீமான் உள்ளிட்ட ஏராளமானோர் திருமகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஈரோட்டில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று , அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி,  குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், முத்துச்சாமி, செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ், காந்தி, மதிவேந்தன, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோரும் நேறில் சென்று அஞ்சலி செலுத்தினர். 

திருமகன் ஈவேராவின் மறைவால் ஈரோட் கிழக்கு சட்டமன்ற தொகுதி தற்போது காலியாகியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறையின் படி, காலியிடம் ஏற்பட்ட சட்டமன்ற தொகுதியில் 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தி புதிய சட்டமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அடுத்த ஆறு மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார்.