#Breaking: ஓசூரில் இந்தியாவின் மிகப்பெரிய ஐ-போன் தொழிற்சாலை..

 
phone


இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை ஓசூரில்  தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் iphone 14 உற்பத்தியை  தொடங்குகிறது ஃபாக்ஸ்கான் நிறுவனம்..

இந்தியாவில் ஏற்கனவே ஃபாக்ஸ்கான், பெகட்ரான், விஸ்ட்ரான் ஆகிய நிறுவனங்கள்  ஐ - ஃபோன்களை தயாரித்து வருகின்றன. உலகிலேயே மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலை சீனாவில்  இயங்கி வருகிறது.  இந்த நிறுவனம் மூடப்படும் நிலையில் இந்தியாவில் புதிய ஆளை தொடங்கப்படுகிறது.   60,000  பேர் ஒரே இடத்தில் பணிபுரியும் வகையில் பிரம்மாண்டமான தொழிற்சாலையை  டாடா  குழுமம் அமைக்கிறது.  தமிழகத்தில் பாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஏற்கனவே ஐபோன் தயாரிப்பு நடைபெற்று வருகிறது.  

iphone 11

இந்நிலையில்,  கடந்த 2  ஆண்டுகளில் ஃபாக்ஸ்கான்  நிறுவனம் மேலும் 53,000   பேரை பணிக்க அமர்த்த முடிவு செய்துள்ளது.  மேலும், ஃபாக்ஸ்கான்  நிறுவனம் தனது ஐபோன்  உற்பத்தியை இரண்டு ஆண்டுகளில் நான்கு மடங்கு அதிகரிக்கவும்  திட்டமிட்டுள்ளது.  இந்நிலையில்  ஓசூரில் அமைய உள்ள புதிய ஆலை பிரமாண்டமாக அமையவுள்ளதாகவும்,  மூன்று மாதங்களில் 16 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறதாகவும் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார்.

இங்கு ஒரே இடத்தில்  60,000 பேர்  பணிபுரியும் வகையில் பிரம்மாண்டமாக தொழிற்சாலையை டாடா குழுமம்  விரிவுபடுத்த உள்ளதாகவும்  தெரிவித்தார்.  தற்போது பெங்களூரில் செயல்பட்டு வரும் விஸ்ட்ரான் நிறுவனம் ஓசூரில் தனது ஆலையை தொடங்குவதாக தகவல் வழியாக உள்ளது