#Breaking: ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டி..

 
 ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடப் போவதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வேட்பாளராக நிறுத்த கட்சி தலைவர் கார் ஒப்புதல் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா மறைவையொட்டி, அந்த தொகுதிக்கு  வருகிற  பிப்ரவரி 27ஆம் தேதி  இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.  மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.  

காங்கிரஸ்

 ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கப்பட்டது. இதில்  மறைந்த எம்.எல்.ஏ திருமகன் ஈவெராவின் சகோதரரும்,  ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில்,  சஞ்சய் சம்பத்தும் விருப்பமனு தாக்கல் செய்தார்.  ஆனால் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது.  இதற்கிடையே  அதிமுகவின் இரண்டு அணிகளும் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக அறிவித்தன.  பாஜகவை பொறுத்தவரை இதுவரை எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை.  இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், யாருக்கும் ஆதரவு இல்லை என்றும்  பாமக  அதிரடியாக அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டி.. 

ஓரிரு நாட்களில் காங்கிரஸ் தலைமை வேட்பாளரை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஈ.வி.கே.எஸ் . இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வேட்பாளராக நிறுத்த கட்சி தலைவர் கார் ஒப்புதல் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.. இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.