#Breaking : வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..

 
#Breaking : வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29ம்  தேதி தொடங்கிய நிலையில்  தற்போது  பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் 14ம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வந்தது. அத்துடன்  வங்கக்கடலில் 9ம் தேதி ( இன்று ) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் வானிலை மையம் தொடர்ந்து எச்சரித்து வந்தது.  

புதுச்சேரி மழை

இந்நிலையில்  இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து,  வட திசையில் நகர்ந்து தமிழ்நாடு புதுச்சேரி நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.    அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெற்று நாளை மற்றும் நாளை மறுநாள்  (   10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் )  தமிழகம், புதுச்சேரி திசை நோக்கி நகரக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும்  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.