#Breaking : மார்ச் 13ல் தொடங்குகிறது +2 பொதுத்தேர்வு.. பொதுத்தேர்வு கால அட்டவணையை வெளியிட்டார் அன்பில் மகேஷ்..

 
anbil

10,  11 மற்றும்   12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுக்கான கால  அட்டவணை  வெளியிடப்பட்டுள்ளது.  

2022-  23ஆம் கல்வியாண்டிற்கான 10.  11 மற்றும்  12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் என்று வெளியிட்டுள்ளார். அதன்படி, 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு  மார்ச் 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி அன்று முடிவடையும் என்றும்,  12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு  மார்ச் 13-இல் தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

exam

மேலும்,  மாநிலம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 10 லட்சம் மாணவர்கள்,  3986 மையங்களில் எழுத உள்ளனர். அதேபோல்,  பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 8 லட்சத்து 80 ஆயிரம்  மாணவர்கள் ,  3,169 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர்.  11ம் வகுப்பு  பொதுத்தேர்வை   8 லட்சத்து 50 ஆயிரம்  மாணவ , மாணவிகள்  3,  260 தேர்வு மையங்களில் எழுத உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

10ம் வகுப்பு அட்டவணை :
 

ஏப்ரல் 6 -  தமிழ்
ஏப்ரல் 10 - ஆங்கிலம்
ஏப்ரல் 12-  கணிதம்
 ஏப்ரல் 17 - அறிவியல்
ஏப்ரல் 20  - சமூக அறிவியல்..

11ம் வகுப்பு அட்டவணை :

 பொதுத்தேர்வு அட்டவணை

12ம் வகுப்பு அட்டவணை.. 

பொதுத்தேர்வு அட்டவணை