"அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும்" - பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு!

 
tn

நகர்ப்புறங்களில் மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதலமைச்சராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவை ஒட்டி, சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது பேசிய அவர், "துளி போன்ற ஓராண்டு காலத்தில், கடல் போன்ற விரிந்த சாதனைகளை செய்துள்ளோம்.  ஆட்சிப் பொறுப்பை எனக்கு வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி; எங்கோ ஒரு மூலையிலிருந்து, இங்கு என்னை நிற்க வைக்கும் திமுக தொண்டர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திமுக ஆட்சியின் திட்டங்கள் சென்று சேராத இடமே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது; இந்த ஓராண்டு மக்களுக்காக உண்மையாக உளமாற உழைத்தேன்.  நான் கலைஞர் அல்ல; அவரை போல எனக்கு எழுத தெரியாது; பேச தெரியாது.ஆனால் கலைஞர் போல் உழைக்கத் தெரியும்.  என் மீது கலைஞர் மற்றும் பேராசிரியர் வைத்த நம்பிக்கையை காப்பாற்றியுள்ளேன்.  அடித்தட்டு பெண்களும் பயன்பெறும் வகையில் திட்டங்களை தருவதே இந்த அரசின் உண்மையான சாதனை. திமுகவின் ஓராண்டு ஆட்சியில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது, வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் 68,800 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்" என்றார்.

tn

தொடர்ந்து சட்டப்பேரவையில் 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அவை பின்வருமாறு:-

*ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க புதிய திட்டம் கொண்டுவரப்படும். ஊட்டச்சத்து குறைபாட்டை களைய  6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும் 

*180 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிகள் மேம்படுத்தப்படும்; டெல்லியை போன்று தமிழகத்திலும் தகைசால் பள்ளிகள்  உருவாக்கப்படும்

tn

*அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும்; முதற்கட்டமாக 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் கொண்டுவரப்படும். முதற்கட்டமாக மாநகராட்சி, தொலைதூர கிராமங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டு, படிப்படியாக விரிவு செய்யப்படும்.

*ஆரம்ப சுகாதார நிலையங்களைப் போல, தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சி,  அறுபத்தி மூன்று நகராட்சிகளில் 708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும்

*234 தொகுதிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும்