அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி: விஜயகாந்த் பாராட்டு..

 
விஜயகாந்த்

அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை வரவேற்பதாக தேமுதிக தலைவர்  விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

 மாணவர்களுக்கு சத்துணவு

  தமிழகத்தில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டது.  இதற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் , விஜயகாந்த் தனது பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. முதல்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் ஒரு லட்சத்து 14 ஆமித்து 95 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டிருப்பதை பாராட்டுகிறேன்.

விஜயகாந்த்

இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும் மதிய உணவு திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது போன்று காலை சிற்றுண்டி திட்டத்தையும் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். காலை சிற்றுண்டி திட்டம் மாணவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் ” என்று குறிப்பிட்டுள்ளார்.