5 பேரின் உயிரை காப்பாற்றிய மூளைச்சாவு அடைந்த பெண்!

 
மூளைச்சாவு

மூளைச்சாவு அடைந்த பெண் உயிரிழந்த பின்பும் உறுப்பு தானம் மூலம் 5 பேரது உயிரை காப்பாற்றியுள்ளார். விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம், சிறுநீரகம் தானம் செய்யப்பட்ட நிலையில் பெண்ணின் இதயம் சென்றை காவேரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிக்கு பொருத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அகாரம் கிராமத்தை சேர்ந்த கலைச்செல்வி(43) இவருடைய கணவர் முருகன் என்பவர் 6 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில் 2 பெண் பிள்ளைகளுடன் கலைச்செல்வி கூலி வேளை செய்து வருகிறார். அவருக்கு 2 பெண் பிள்ளைகளையும் படித்து வருகின்றனர். இந்த நிலையில், கலைச்செல்வி கடந்த 1-ம் தேதி மாலை சாலை ஓரமாக நடந்துச் சென்ற போது பின்பக்கமாக வந்த இருச்சக்கர வாகனம் கலைச்செல்வி மீது மோதியதில் அவர் படுகாயம் அடைந்து அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்த கலைச்செல்வி இன்று காலை மூளைச்சாவு அடைந்துள்ளார். 

இவரது இதயம் உட்பட உடல் உறுப்புகளை தானமாக வழங்க உறவினர்கள் ஒப்புக்கொண்டதையடுத்து உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. இதற்கான அறுவை சிகிச்சை அதே மருத்துவமனையில் நடைபெற்றது. இதயம் சென்னை காவேரி மருத்துவமனைக்கும், இடது சிறுநீரகம் சென்னை வேளச்சேரி பிரசாந்த் மருத்துவமனைக்கும், வளது சிறுநீரம் வேலூர் ஸ்ரீ நாராயணி மருத்துவமனைக்கும், கல்லீரல், இரண்டு கண்கள் சென்னை போரூர் இராமச்சந்திரா மருத்துவமனைக்கும், அனுப்பி வைக்கப்பட்டது. முதற் கட்டமாக இதயம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அந்த இதயம் ஆம்புலென்ஸ் மூலமாக காவேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் மூளைச்சாவு அடைந்த பெண் உயிரிழந்த பின்பும் 5 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது நெழிச்சியை ஏற்படுத்தியுள்ளது.