ஜல்லிக்கட்டில் காளை முட்டி சிறுவன் உயிரிழப்பு; 57 பேர் காயம்

 
Jallikattu

தருமபுரியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் 14 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

jallikattu

தருமபுரி அருகே தடங்கம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது, வீரர்களுடன் உறுதிமொழியேற்ற பிறகு வேளாண்மை மற்றும் உழவர் நலன்துறை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் கொடியசைத்து துவக்கி வைத்தார். மொத்தம் 8 சுற்றுகளாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 625 காளைகள் மற்றும் 350 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டன.சீறி வந்த காளைகளை வீரர்கள் அடக்கியும், அடங்க மறுத்த காளைகள் ஆக்ரோசம் காட்டியும் வீரர்களை திணறிடித்தன. பார்வையாளர்கள் விசிலடித்தும், கத்தி கூச்சலிட்டும் ஆரவாரத்துடன் ஜல்லிக்கட்டு போட்டியினை உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியினை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகனான கோகுல்(14) என்ற  சிறுவன் உயிரிழந்தான். ஜல்லிக்கட்டில் பங்கேற்று காயமடைந்த வீரர்கள் 57 பேர் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டனர். போட்டியின் இறுதியில் வெற்றி பெற்ற திருச்சியை சேர்ந்த ஆனந்த் (36) என்பவரது காளைக்கு முதல் பரிசாக ஒரு இருசக்கர வாகனமும், சிறந்த மாடு பிடி வீரர்களுக்கான முதல் பரிசாக ஒரு இரு சக்கர வாகனம் மதுரையை சேர்ந்த ஜகதிஷ், திவாகர் ஆகிய இருவருக்கு வழங்கப்பட்டது.