திருச்சி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

 
திருச்சி ரயில் நிலையம்

திருச்சி ரயில் நிலையத்திற்கு வாட்ஸ் அப்பில் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருச்சி - ஊறும் வரலாறு - 5: ரயில் புராணம்! | Trichy History: Some  noteworthy facts about the arrival of Railways in Trichy

தமிழகத்தின் மையப் பகுதியாக திருச்சி விளங்கி வருகிறது.டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்தும், அதேபோல தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும்  நாள்தோறும் நூற்றுக்கணக்கான ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் இன்று மதியம் 2 மணியளவில் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலக நுண்ணறிவு பிரிவு போலீசாரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு தகவல் வந்துள்ளது. அதில் ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து  திருச்சி ரயில் நிலையத்தில், ரயில்வே போலீசார் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களுடன் சோதனையில் ஈடுபட்டனர்.பயணிகளின் உடைமைகள், பொருட்கள் வைக்கும் அறை (Clock room), ரயில் பெட்டிகளில் சோதனை மேற்கொண்டனர். இருப்பினும் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. எனவே இது வெறும் வதந்தி தான் என்பதை அறிந்த போலீசார், மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.