குமரியில் திடீரென கொந்தளித்த கடல் - படகு போக்குவரத்து ரத்து

 
Kumari

கன்னியாகுமரியில் காலை முதலே கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு செல்லும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. 

உலகின் புகழ் பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றாக கன்னியாகுமரி விளங்கி வருகிறது. கடலுக்கு நடுவே உள்ள திருவள்ளூவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் மற்றும் திற்பரப்பு அருவியை காண்பதற்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.  இதனிடையே சனிகிழையான இன்று கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தவர்கள், கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை காண திரண்டனர். அங்கு செல்ல காலை 8 மணி முதல் படகு போக்குவரத்து தொடங்கும் என்பதால் அவர்கள், படகு குழாமில் பயணச்சீட்டு பெற காலை 6 மணிக்கே வரிசையில் நின்றனர். 

ஆனால் கன்னியாகுமரி கடல் பகுதியில் வழக்கத்தை விட இன்று காலை காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. ராட்சத அலைகள் சுமார் 15 அடி உயரம் வரை எழுந்தது. இதனால் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்ததால் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. எனவே விவேகானந்தர் மண்டபம் செல்ல ஆவலுடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.