போடி மெட்டு மலைப்பாதையில் லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து

 
accident

தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு செல்லும் போடி மெட்டு மலைச் சாலையில் புலியூத்து அருவிஅருகே டிம்பர் லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் லாரி டயரில் சிக்கி ஒருவர் பலிஉடன் வந்த தங்கை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

தேனி மாவட்டம் வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த மாரிச்சாமி மகன் தாமரைக்கண்ணன் (27). என்பவரும், அவரது தங்கை அர்ச்சனா ஆகிய இருவரும் கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டம் சாந்தாம்பாறையிலிருந்து மாலை இருசக்கர வாகனத்தில் போடிமெட்டு மலைச் சாலை வழியாக இறங்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது புலியூத்து அருவி அருகே தேனியில் இருந்து கேரளாவிற்கு சல்லிக்கற்கள் ஏற்றிக்கொண்டு சென்ற டிம்பர் லாரி வளைவில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் டிம்ப லாரி மீது மோதியது.

இதில் டயரில் சிக்கியதில்-பின் டயர் ஏறியதில்சம்பவ இடத்திலேயே தாமரைக்கண்ணன்  பலியானார். பின்னால் அமர்ந்திருந்த அர்ச்சனா தூக்கி வீசப்பட்டு அதிஷ்டவசமாக உயிர்த்தபினர். இச்சம்பவம் குறித்து குரங்கணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்