புழுக்கள் நெளியும் உணவு ; பரிதாப நிலையில் பாரதியார் பல்கலை. விடுதி மாணவிகள்!

 
kamal

பாரதியார் பல்கலைக்கழகத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மநீம வலியுறுத்தியுள்ளது.

tn

பாரதியார் பல்கலைக்கழகத்தில் 1500 மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வரும் நிலையில் சரியான உணவு வழங்கப்படவில்லை என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  விடுதி முழுவதும் சுத்தம் செய்யாமல் துர்நாற்றம் வீசுவதாகவும், தண்ணீர் போதுமான அளவு வழங்கப்படுவதில்லை என்றும் அவர்கள் புகார் கூறியுள்ளனர்.



கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழக விடுதியில் 1500 மாணவிகள் தங்கியுள்ளனர். இங்கு தரமான உணவு வழங்கப்படுவதில்லை,  விடுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரச் சீர்கேடு நிலவுகிறது என மாணவிகள் தொடர்ந்து பல்கலை. பதிவாளர் மற்றும் விடுதிக் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். பல மாதங்களாக இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையில், விடுதியில் வழங்கப்பட்ட உணவில் புழு, பூச்சிகள் கிடந்துள்ளன. உணவுக்காக கட்டணம் வசூலிக்கும் நிலையில், தரமற்ற, கெட்டுப்போன உணவு வழங்கப்படுவதாகப் புகார் தெரிவித்து, மாணவிகள் பல்கலை.யில் தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயர்கல்வி பயில்வதற்காக விடுதியில் தங்கியுள்ள மாணவிகளுக்கு, கெட்டுப்போன உணவு வழங்குவது கண்டனத்துக்குரியது. மாணவிகளுக்குத் தரமான, சுகாதாரமான உணவும், குடிநீரும் வழங்குவதுடன், சுற்றுப்புறத் தூய்மையைப் பராமரித்து, அவர்களது ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டுமென்று மநீம வலியுறுத்துகிறது.