நாளை முதல் வங்கிகள் 5 நாட்கள் செயல்படாது!!

 
bank

குடியரசு தின விழா மற்றும் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக நாளை முதல் வங்கிகள் ஐந்து நாட்கள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

bank

தொழில் நிறுவனங்கள், வர்த்தகர்கள், அரசு கருவூலங்கள் மற்றும் பொது மக்களின் தினசரி பண பரிவர்த்தனைக்கு முக்கிய பங்காற்றி வரும் வங்கிகள் விடுமுறை என்றாலே மக்கள் செய்வதறியாது ஸ்தம்பித்து விடுவார்கள். காசோலை சேவைகள் , பண பரிவர்த்தனை ஆகிய சேவைகள் இதனால் பாதிக்கப்படும்.  இதன் காரணமாக வங்கி விடுமுறை முடிந்த மறுநாள் அனைத்து வங்கிகளிலும்  கூட்டம் என்பது அலைமோதும். 

bank

இந்நிலையில் நாளை முதல் ஐந்து நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  பழைய ஓய்வூதியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் வருகிற 30-ஆம் தேதி திங்கள்கிழமை மற்றும் 31ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட உள்ளது. அன்றைய தினங்களில் தமிழக முற்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து பொது வங்கிகளும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . அத்துடன் குடியரசு தினத்தை முன்னிட்டு வங்கிகளுக்கு நாளை அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.  வரும் சனிக்கிழமை நான்காவது சனிக்கிழமை என்பதாலும்,  அன்றைய தினமும் மறுநாள் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை நாளாகும்.  இடையில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் வங்கிகள் செயல்படும்.  வங்கிகள் ஐந்து நாட்கள் செயல்படாததால் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.