ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் எதிரொலி - நீலகிரியில் வளர்ப்பு பன்றிகளை விற்க தடை

 
tn

நீலகிரி மாவட்டத்தில் வளர்ப்பு பன்றிகளை விற்க தடை விதித்தது மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

tn

கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் காட்டு பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் உறுதியாகியுள்ளது.  இந்த சூழலில் நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் இருக்கும் பன்றிகளுக்கு ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல்  இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழந்ததால், உடல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் பன்றிகள் ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.


tn


இந்நிலையில்  நீலகிரி மாவட்டம் முதுமலை பகுதியுல் உள்ள பன்றிகளுக்கு ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் பரவலை அடுத்து, மாவட்டத்தில் வளர்ப்பு பன்றிகளை விற்க தடை விதித்தது மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.