துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களை இணையதளங்களில் வெளியிட தடை!!

 
high court

துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களை இணையதளங்களில் சட்ட விரோதமாக  வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

thunivu and varisu

பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடித்திருக்கும் துணிவு திரைப்படமும், விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படமும் வெளியாக உள்ளன.  நாளை இந்த இரு திரைப்படங்களும் திரைக்கு வர உள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  இரண்டு திரைப்படங்களுக்கும் ஒரே நேரத்தில் சிறப்பு காட்சி திரையிட வேண்டாம் என திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் அஜித் நடித்திருக்கும் துணிவு திரைப்படத்தை நாளை அதிகாலை ஒரு மணிக்கும் ,  விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் சிறப்பு காட்சி அதிகாலை 4 மணிக்கும் திரையிட விநியோக நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளனர். 

varisu vs thunivu
.
இந்நிலையில் துணிவு வாரிசு திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.  வாரிசு படத்தை வெளியிட 4548 இணையதளங்கள் , துணிவு படத்தை வெளியிட 2754 இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது . இரண்டு தயாரிப்பு நிறுவனங்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்த நிலையில் இவ்வாறு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.