குற்றால அருவிகளில் குளிக்க 4வது நாளாக தடை நீடிப்பு!!

 
Courtallam

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை 4வது நாளாக நீடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெளியூர்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Courtallam

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சிமலை நீர்பிடிப்பு பகுதில் தொடர் மழை; பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்ந்துள்ளது. 143 அடி கொள்ளவு கொண்ட அணையில் தற்போது நீர்மட்டம் 84 அடியாக உள்ளது. அத்துடன்  களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய பகுதியில் உள்ள தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது . அதேசமயம் தலையணையை பார்வையிட தடை இல்லை என வனத்துறை அறிவித்துள்ளது. 

tn

பொள்ளாச்சி அருகே உள்ள 120 அடி உயரம் கொண்ட ஆழியார் அணை நீர்மட்டம் 118 அடியை எட்டியதால், பாதுகாப்பு கருதி ஒன்பது மதகுகள் வழியாக வினாடிக்கு 2,250 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.