மீன் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி

 
மீன் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி

சென்னை அம்பத்தூரில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை மீன் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

A one-and-a-half-year-old girl died after falling into a fish tank near  Ampathur | அம்பத்தூர் அருகே மீன் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது பெண்  குழந்தை உயிரிழப்பு

சென்னை அம்பத்தூர் வெங்கடபுரம் வன்னியர் தெருவை சேர்ந்த யுவராஜ், பிளம்பர் வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி கௌசல்யா வீட்டில் குழந்தையை பார்த்துக் கொண்டு வருகிறார். எப்பொழுதும்போல் யுவராஜ் மனைவியிடம் குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார்.  ஆனால் கௌசல்யாவோ வீட்டு வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தார்.

அவர்களுடைய ஒன்றறை வயது பெண் குழந்தை மீனாட்சி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் வைத்திருந்த மீன் தொட்டியில் மீனாட்சியின் விளையாட்டு பொருள் விழுந்துள்ளது. விளையாட்டுப் பொருளை எடுக்க குழந்தை மீனாட்சி முயன்றபொழுது த
மீன் தொட்டிக்குள் தலை கீழே கவிழ்ந்து உள்ளே விழுந்து விட்டாள்.  இதனை கவனிக்கத் தவறிய தாய் கௌசல்யா வீட்டின் வெளியே வேலை செய்து கொண்டிருந்தார். 

பத்து நிமிடம் கழித்து கௌசல்யா உள்ளே வந்து பார்க்கும்போது குழந்தை தலைகீழாக மீன் தொட்டியில் விழுந்திருப்பதைக் கண்டு, அலறியடித்து தூக்கிக்கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.