பாஜகவினரின் மனதைரியத்தை குறைத்துவிட முடியாது - அண்ணாமலை

 
annamalai

கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

tn

கோவை காந்திபுரம் சித்தாபுதூர் பகுதியில் பாஜக மாவட்ட அலுவலகம் நேற்று இரவு 8:40 மணியளவில் இருசக்கர வாகனத்தில் மர்ம நபர்கள் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றனர்.  கோவை, வி.கே.மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய நிலையில் நல்வாய்ப்பாக பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை. இது குறித்து மாநகர காவல் துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பெட்ரோல் குண்டை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 


இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில்,  கோயம்புத்தூர் பாஜக கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி எங்கள் சகோதர சகோதரிகளின் மன தைரியத்தை குறைத்து விடலாம் என்று யாரும் நினைத்து விட வேண்டாம். இது போன்ற அச்சுறுத்தல்கள் சமூக விரோதிகளுக்கு எதிரான எங்கள் சமூக பணியை மேலும் வேகப்படுத்தும். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை திமுக அரசு உணர வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.