இதைவிட அவமானமாக யாரும் பேச முடியாது- ஆ.ராசா மீது பாஜக துணைத்தலைவர் டிஜிபி ஆலுவலகத்தில் புகார்

 
k

 மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசி இருக்கும் ஆ. ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார் தமிழக பாஜகவின் துணைத் தலைவர் கரு. நாகராஜன்.  இதையடுத்து ஆ.ராசா மீது  நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றது காவல்துறை.

ar

 திமுக துணை பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ. ராசா கடந்த ஆறாம் தேதி அன்று சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய போது,  இந்துக்கள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்துகின்ற வகையில் பேசியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது .

இந்நிலையில்,  தமிழக பாஜக துணைத் தலைவர் கரு. நாகராஜன் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.   அந்த புகார் மனுவில்,   சென்னையில் நடந்த கூட்டத்தில் திமுக எம்பி ஆ. ராசா இந்து மதத்தை பற்றியும் இந்து மதத்தின் வழிபாட்டு முறைகள்  பற்றியும் அவதூறு பரப்புகின்ற வகையில் கருத்துக்களை கூறியிருக்கிறார் .  

தமிழகத்தில் மத கலவரத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது ஆ. ராசாவின் பேச்சு.   அவர் இந்து மதத்திற்கு எதிரான கருத்துக்களை நயவஞ்சமாக பரப்பி வருகிறார். தமிழ்நாட்டில் 85 சதவிகிதம் அளவுக்கு வாழக்கூடிய இந்து சமய மக்கள் குறித்து இதைவிட அவமானமாக யாரும் கொச்சைப்படுத்தி பேசிவிட முடியாது. 

dgp

 ஆ. ராசாவின் இந்த பேச்சினால் தமிழக மக்கள் மிகுந்த வேதனையோடும் துயரத்தோடும் மனம் நொந்து போயிருக்கின்றார்கள்.   இந்துக்களின் பெரும்பான்மையான வாக்குகளை வாங்கி வெற்றி பெற்று எம்பி ஆக இருக்கும்  ராசா இதுபோல் பேசி இருப்பது ஜனநாயக விரோதம்.   அதனால் அவர் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து உரிய  நடவடிக்கை எடுக்க எடுத்து தக்க தண்டனையும் பெற்றுத் தர வேண்டும் என்று கோரி இருக்கிறார்.

 இந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றார்கள்.