காயத்ரி ரகுராமின் ராஜினாமாவை அண்ணாமலை ஏற்றுக்கொண்டார்- பாஜக அறிக்கை

 
gayathri raghuram annamalai

காயத்ரி ரகுராம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலின்படி  அவர்கள் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்படுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என மாநில தலைமை அலுவலக பொறுப்பாளர் லோகநாதன் தெரிவித்துள்ளார். 

கட்சிக்கு களங்கம்..காயத்ரி ரகுராம் 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட்..பாஜக தலைவர்  அண்ணாமலை அதிரடி | Gayathri Raghuram suspended for 6 months From BJP says  Annamalai - Tamil Oneindia

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “6 மாத காலம் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டிருந்த திருமதி காயத்ரி ரகுராம், தனது சுய விருப்பத்தின் பெயரில் விலகுவதாக சமூக வலைத் தளங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.
 
கட்சியிலிருந்து அத்துடன் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் அவர்களுக்கு வாட்ஸ் அப்பில் "நான் ராஜினாமா செய்கிறேன்" என்று செய்தியும் அனுப்பி இருந்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு மாநில தலைவர் திரு. K.அண்ணாமலை Ex.IPS அவர்களின் ஒப்புதலின்படி திருமதி காயத்ரி ரகுராம் அவர்கள் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்படுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது எதிர்கால முயற்சிகளும், பணிகளும் வெற்றியடைய வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.