பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என வாட்ஸ் அப்பில் பதிவிட்ட பாஜக நிர்வாகி கைது

 
periyar

பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என வாட்ஸ் அப்பில் அவதூறு பதிவு   வெளியிட்ட பாரதிய ஜனதா நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

arrest

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவையொட்டி பிரதமர் மோடி கடந்த 28-ந்தேதி சென்னை வந்திருந்தார். அவரது வருகையையொட்டி சென்னையில் பல இடங்களில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த மோடியின் உருவப்படம் மீது சிலர் கரி பூசியதாக கூறப்படுகிறது. இதற்கு பா.ஜனதா நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தென்காசி மாவட்ட பா.ஜனதாவின்  விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு துறை தலைவராக இருக்கும் கிருஷ்ணன்(வயது 28) என்பவர் இருபிரிவினர் இடையே பிரச்சினையை தூண்டும் விதமாக பெரியார் சிலைகள் மீது அவதூறு செய்ய வேண்டும் எனவும், சிலைகளை உடைக்கவேண்டும் என்றும் வாட்ஸ் அப் பதிவுவெளியிட்டு இருந்ததாக புளியங்குடியை சேர்ந்த தி.மு.க.வினர் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து புளியங்குடி போலீசார்  விசாரணை நடத்தியநிலையில், தாருகாபுரம் சேர்ந்த கிருஷ்ணன் மீது இந்திய தண்டனை சட்டம் 153(ஏ), 505 உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.