திமுக அரசையும், முதலவர் முக ஸ்டாலினையும் பாராட்டிய பாஜக கவுன்சிலர்

 
உமா ஆனந்த்

சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால்கள் பணிகளுக்காக முதலமைச்சரையும் மாநகராட்சியையும்  பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் பாராட்டினார்.

'எனக்கும் இந்தி தெரியாது' - பாஜக உறுப்பினர் உமா ஆனந்தன் பேச்சால் சென்னை  மாநகராட்சி மாமன்றத்தில் சிரிப்பலை

 
சென்னை மாநகராட்சி முழுவதும் மழைநீர் வடிகால்கள் பணிகள் நடைபெற்று வருகின்றன. பருவ மழை  தொடங்கவுள்ள நிலையில், போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதால் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், மேயர், மாநகராட்சி ஆணையர் உட்பட பலரும் அவ்வப்போது பணிகளின் நிலைக்குறித்து நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். 

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டமானது ரிப்பன் மாளிகையில் இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த், மழைநீர் பணிகளை துரிதமாக மேற்கொள்வதற்கு பாராட்டுகளை தெரிவித்தார். மேலும், மாரத்தான் முறையில் நகரம் முழுவதும் தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறிய அவர், முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் நேரு, சுப்ரமணியன், மேயர் பரியா, ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆகியோருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார். இதனால், மன்றத்தில் இருந்த திமுக கவுன்சிலர்கள் உட்பட அனைவரும் மேஜயை தட்டி வரவேற்றனர்.