திமுக தொண்டர்களாக மாறிய தமிழக போலீஸ் - ஹெச்.ராஜா பாய்ச்சல்

 
h

தமிழக காவல்துறையினர் திமுக தொண்டர்களை போல செயல்பட்டு வருவதாக பாஜக மூத்த தலைவரான ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலை மைங்கைபாகர் தேனம்மை கோவிலில் பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி பாஜக சார்பில் சிறப்பு யாகம் மற்றும் வழிபாடு நடைபெற்றது. இதில் ஹெச்.ராஜா கலந்துகொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா கூறியதாவது: ராஜா அநாகரிகமான முறையில் இந்துக்கள் அனைவரும் விபச்சாரியின் மகன் என்று கூறி வருகிறார் ஆ.ராசா. அவர் பேசுவது, கோபாலபுரம்குடும்பத்துக்கும் பொருந்துமா என்பது எனக்கு தெரியவில்லை.

 வெகுஜன விரோதியான ராசாவை, தி.மு.க.,வில் இருந்து ஸ்டாலின் நீக்க வேண்டும். இதுபோல் வேறு மதத்தவரை பேசியிருந்தால் ஸ்டாலின் அரசு சும்மா இருக்குமா? ஆ.ராசா சொல்வதைப் போல் ஸ்டாலின் குடும்பமும் என்று பதிவு போட்ட சங்கரன்கோவில் பா.ஜ.க ஒன்றிய செயலர் பேச்சிமுத்துவை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் போலீசார், தி.மு.க. தொண்டர்களை போல் செயல்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.