காங்கிரஸ் மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்... ராகுல் காந்தியால் காப்பாற்ற முடியாது - வானதி சீனிவாசன்

 
Vanathi seenivasan

ராகுல் காந்தி ஓடினால் கூட காங்கிரஸ் கட்சியை காப்பாற்ற முடியாது - வானதி நீனிவாசன்

கோவை சுகணா புரத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: காங்கிரஸ் கட்சிக்கு உயிரூட்ட செய்யும் முயற்சியே ராகுல் காந்தியின் நடைபயண திட்டம். காங்கிரஸ் கட்சி என்பது மூழ்கிகொண்டிருக்கும் ஒரு கப்பல். ராகுல் காந்தி நடந்தாலும், ஓடினாலும், மாரத்தான் ஓடினாலும் காங்கிரசை காப்பாற்ற முடியாது. இந்த நடைபயணம் ராகுல் உடல் நலனுக்கு வேண்டுமானால் நல்லதாக இருக்கலாம். ஒரு போதும் நாட்டு நலனுக்கோ, காங்கிரஸ் கட்சிக்கோ நல்லதாக இருக்காது என்றார். தொடர்ந்து பேசிய அவர், தேனி மாவட்டம், ஓடைப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சமத்துவபுரத்தை சேர்ந்த சிறுமி இயற்கை உபாதையை கழிக்க சென்று ஏழு அடி ஆழ குழிக்குள் விழுந்து பலியானது மிகவும் துயரமானது. அரசு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.