ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை விசிக புறக்கணிப்பதால் டீ செலவு மிச்சம்: அண்ணாமலை

 
annamalai

குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை விசிக புறக்கணிப்பதால் டீ செலவு மிச்சம் என பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

Annamalai


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட்டு தங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. இடைத்தேர்தலை பொறுத்தவரை பணத்தை கொட்டி ஆளும் கட்சியினர் வெல்வார்கள். மக்களை அடிமைப் போல நடத்துவதுதான் திமுக. குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை விசிக புறக்கணிப்பதால் டீ செலவு மிச்சம். 2026 ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பயன்பாட்டுக்கு வந்துவிடும்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பே, திமுக வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்துவருகிறது. காரணம் திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. சேதுசமுத்திர திட்டம் குறித்து பாஜக எழுப்பிய கேள்விக்கு இதுவரை திமுக பதில் அளிக்கவில்லை. மக்களின் கோபத்துக்கு திமுக ஆளாகியுள்ளனர். திமுகவை எதிர்த்து போட்டியிடும் நமது வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதே நோக்கம். நமது கூட்டணி வேட்பாளர் வலுவாக இருக்க வேண்டும். பாஜகவின் நிலைப்பாடு விரைவில் அறிவிக்கப்படும்.

எங்கள் தேர்தல் எது என்பது எங்களுக்கு தெரியும், எந்த தேர்தலில் பலப்பரீட்சை நடத்த வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அதில் பாஜக களமிறங்கும். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றதேர்தல் எங்களுடையது. திமுக இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தது. ஆனால் வழங்கவில்லை. ஆனால் பிரதமர் மோடி சொன்னதைவிட அதிக அளவு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளார்." எனக் கூறினார்.