இந்து விரோத திமுக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் - ஹெச்.ராஜா

 
h

விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத இந்து விரோதியை அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 


இந்து முன்னணி சார்பில், கோவை தெப்பக்குளம் மைதானத்தில் நடைபெற்ற விநாயகர் சிலை விசர்ஜன பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா கலந்துகொண்டார். மேடையில் உரையாற்றிய அவர் கூறியதாவது: இந்து விரோதிகள், தமிழகத்தில் சுதந்திரமாக திரிகின்றனர். இந்து சமுதாயத்துக்கு இரண்டு அச்சுறுத்தல்கள் இருக்கின்றன. வெளியில் இருந்து நடக்கும் மதமாற்றத்தாலும், உள்ளிருந்து எதிர்க்கும் ஹிந்து விரோதத்தாலும் அச்சுறுத்தல் இருக்கிறது.விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத இந்து விரோதியை, அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என, வீடு வீடாக சென்று வலியுறுத்த வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு வாழ்த்துச் சொல்லாமல், மற்ற மதங்களின் விழாவுக்கு வாழ்த்து சொல்பவர் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது.  மாற்றத்துக்கான அறிகுறிகள் தெரிகின்றன. நாம் அசட்டையாக இருந்து விடக்கூடாது. இந்து சமுதாயத்துக்கு எதிராக, எல்லா வகையிலும் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.