ஈரோடு கிழக்கு தேர்தல் பணிகளுக்காக பாஜக தேர்தல் குழு அமைப்பு

 
Annamalai

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலை எதிர்கொள்ள தேர்தல் பணி குழுவை பாஜக அமைத்துள்ளது. 

annamalai

ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா, உடல்நலக்குறைவால் அண்மையில் உயிரிழந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.  இதன் பின்னர் இடைத்தேர்தல் தேதி எந்த நேரமும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில்,  தேர்தல் தேதியினை இன்று அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.   பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும்,  வாக்கு எண்ணிக்கை மார்ச் மாதம் இரண்டாம் தேதி நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

Image

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலை எதிர்கொள்ள தேர்தல் பணி குழுவை பாஜக அமைத்துள்ளது. இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், கவனிக்கவும் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் வேதானந்தம், சரஸ்வதி, என்.பி. பழனிசாமி, சிவசுப்ரமணியம், செந்தில், சிவகாமி மகேஸ்வரன், பொன்.ராஜேஷ் குமார், விவேகானந்தன், விஸ்வா பாலாஜி, விநாயக மூர்த்தி, தங்கராஜ்,ஆற்றல் அசோக் குமார், புனிதம் ஐயப்பன், ரஞ்சித் ஆகியோரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நியமித்துள்ளார்.