தமிழகம் முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம் - கடலூரில் அண்ணாமலை ஆர்ப்பாட்டம்

 
am

பாஜக சார்பில் இன்று தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.   திமுக அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.  கடலூரில் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

amm

 மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி குழு குடியரசுத் தலைவரிடம் அளித்த பரிந்துரைகள் பற்றி ஊடகங்களில் தகவல்கள் கசிந்தன. இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள ஐஐடிகள்  உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் இந்தியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகள் அதில் இருந்ததாக தெரிகிறது.

 இதை கண்டித்து திமுகவின் இளைஞர் -மாணவர் அணி சார்பில் தமிழக முழுவதும் போராட்டம் நடந்தது . அண்மையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்திலும் மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .

nn

இந்த நிலையில் திமுக அரசு தாய் மொழிக்கு முடிவுரை எழுத முயற்சிப்பதாக சொல்லி பாஜக சார்பில் தமிழக முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. கடலூரில் நடைபெறும் போராட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்க இருக்கிறார்.