”சூர்யா சிவா எனக்கு தம்பி மாதிரி” எனக் கூறிய டெய்சி! ஏய் எப்புட்றா மொமண்ட்

 
டெய்சி

பா.ஜனதா சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி மற்றும் ஓ.பி.சி. பிரிவு மாநில பொதுசெயலாளர் திருச்சி சூர்யா சிவா இருவரும் செல்போனில் பேசினர். அப்போது இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், இருவரும் சரமாரியாக ஆபாச வார்த்தைகளில் பேசினர். இந்த வாக்குவாதம் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக இருவரிடமும் விசாரணை நடத்தப்படும் என பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை குழு அமைக்கப்பட்டது. அதன்படி திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் விசாரணை நடந்தது. பா.ஜனதா மாநில துணைத்தலைவர் கனக சபாபதி, மாநில செயலாளர் மலர்கொடி ஆகியோர் டெய்சி மற்றும் திருச்சி சூர்யா ஆகியவரிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடந்தது. இந்த விசாரணை அறிக்கை தலைமைக்கு அனுப்பப்படும் என விசாரணை கமிட்டியினர் தெரிவித்தனர்.

விசாரணைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி, “எங்களுக்கிடையில் பரஸ்பரம் பேசி முடித்துக்கொண்டோம். தம்பி போலத்தான் சூர்யா சிவா இதனை பெரிதுபடுத்த வேண்டும்.  இதுகுறித்து தலைவர் அண்ணாமலை என்னிடம் பேசினார். இனிமேல் இதுபோல் நடக்க கூடாது என என்னிடம் அண்ணாமலை உறுதி வாங்கிக்கொண்டார். முறையாக கூப்பிட்டு விசாரித்தனர். மற்ற கட்சியில் உள்ள தலைவர்களும் இதுபோன்று பேசி உள்ளனர். இது ஒன்றும் புதிது இல்ல” என்றார்.