போலி பாஸ்போர்ட் விவகாரம் - ஆளுநரிடம் அண்ணாமலை புகார்!!

 
ttn

ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்துள்ளார்.

tn

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 13ம் தேதி 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டார்.   இந்த விவகாரத்தில் மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் 4 நாட்களாக போராட்டம் நடத்திய நிலையில், கடந்த 17ஆம் தேதி போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் பள்ளிகூடம் சூறையாடப்பட்டது. பள்ளி பேருந்துகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன . இந்த சம்பவத்தில் காவல்துறையும் உலகம் உளவுத்துறையும் சரிவர இயங்கவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.  

tn

இந்நிலையில் போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை சந்தித்து வலியுறுத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது,  மாணவி இறந்த விவகாரம், கள்ளக்குறிச்சி வன்முறை,  தமிழகத்தின் சட்ட முழுங்கு பிரச்சினை , தமிழக அரசியல் நிலவரம் உள்ளிட்டவை குறித்து பேசியதாக தெரிகிறது. இந்த சந்திப்பின்போது வி.பி. துரைசாமி கே.பி. ராமலிங்கம், முருகானந்தம், கார்த்தியாயினி, சரவணன் , தட்சிணாமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர் .