தோனியை மீண்டும் இந்திய அணிக்கு அழைக்க பிசிசிஐ முடிவு? - காரணம் இதுதான்

 
dhoni

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை மீண்டும் இந்திய அணிக்கு அழைப்பது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

டி20 உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது. இந்த தொடரில் கோப்பையை வெள்ளும் அணிகளுள் ஒன்றாக பார்க்கப்பட்ட இந்திய அணி அரையிறுதி போட்டியில், இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து வெளியேறியது. இதனையடுத்து இந்திய அணியை பலதரப்பினரும் கடுமையாம விமர்சித்து வருகின்றனர். இந்திய அணியின் மோசமான பந்துவீச்சு காரணமாகவே இந்திய அணி படுதோல்வி அடைந்ததாக ரசிகர்கள் குற்றம் சாட்டினர். இதேபோல் இந்திய அணி வீரர்கள் தைரியமின்றி தயக்கத்துடன் ஆடியதை முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்துள்ளனர். 

Dhoni- kholi

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை மீண்டும் இந்திய அணியில் சேர்க்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்.எஸ்.தோனிக்கு இந்திய அணியில் மிகப்பெரிய பொறுப்பை கொடுக்க பிசிசிஐ ஆலோசனையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 3 வடிவிலான கிரிக்கெட் அணியிலும் பயிற்சியாளராக இருந்து வருவதால், அவரது பணி சுமை அதிகமாக உள்ளதாக பிசிசிஐ கருதுகிறது.. ஐசிசி போட்டிகளில் அந்த அச்சமற்ற பிராண்ட் கிரிக்கெட்டுக்கான திறனைக் கொண்டு வர, டி20 அணியில் தோனியை இயக்குனராக சேர்ப்பது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் ஆலோசகராக தோனி செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.