ஆவடி மாநகராட்சியில் எளிமையாக வரி செலுத்த புதிய ஆப் அறிமுகம்...
ஆவடி மாநாகராட்சியில் வரி செலுத்துவதற்கான கைபேசி செயலியை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அறிமுகம் செய்து வைத்தார்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய நகராட்சியாக விளங்கி வந்த ஆவடி மாநகராட்சி. நகராட்சியாக இருந்து வந்த ஆவடி அண்மையில் தான் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் வரி போன்ற வரி வருவாய்தான், மாநகராட்சி, நகராட்சிகளின் பெரிய வருவாயாக இருண்டு வருகிறது. ஆனால் மொத்தம் 48 வார்டுகள் கொண்ட ஆவடி மாநகராட்சியில் வரி வசூல் செய்வது சவாலாகவே இருந்து வந்தது. இதனை எளிமைப்படுத்தவும், 100 சவதவீத வரியை உறுதிப்படுத்தவும் ஆவடி மாநகராட்சியில் புதிய கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியின் அறிமுக விழா ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு, TNURBAN E SEVAI என்கிற வரி செலுத்தும் செயலியை அறிமுகம் செய்து வைத்தார். இதன் மூலம் வீட்டு வரி, காலிமனை வரி, தொழில் வரி, குடிநீர், ட்ரைனேஜ் வரி என அனைத்து விதமான வரிகளையும் இந்த செயலி மூலம் பொதுமக்கள் எளிமையாக் செலுத்த முடியும்.


