ஆக.3ம் தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - காரணம் இதுதான்!!

 
tn

ஆக.3ம் தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக  மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவித்துள்ளார். 

ஆடிப்பெருக்கு:  வீட்டிலேயே எளிமையாக கொண்டாடலாம்!

ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதத்தில் வரும் 18-ஆம் நாளைக் குறிக்கும். இந்த நாளில் நல்ல மழை பெய்து ஆறுகளில் புது வெள்ளம் பெருகி வரும். அப்போது மக்கள் ஆறுகளில் புனித நீராடுவார்கள். விவசாயிகள் தங்கள் உழவுத் தொழில் சிறப்பாக அமைய வேண்டும் என இறைவனை வேண்டி கொள்வர். அத்துடன் ஆறுகளின் கரையோரப் பகுதிகளில் மக்கள் வழிபாடு செய்வர். அதனால்தான் கரையோரப் பகுதிகளில் மக்கள் பயன்பாட்டிற்காக படித்துறைகள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அந்தப் படித்துறைகள் 18 படிகள் கொண்டதாக இருக்கும். ஆனால் கொரோனா காரணமாக ஆடிப்பெருக்கு திருவிழாவிற்கு கடந்த 2 ஆண்டுகளாக  தடை விதிக்கப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளில் ஆடிப்பெருக்கு கொண்டாடும் நிலை ஏற்பட்டது.

salem

தற்போது கொரோனா காரணமாக குறைந்து இயல்பு வாழ்க்கை  திரும்பியுள்ளதால் ஆடி பெருக்கு  வருகிற ஆகஸ்ட் 3ஆம் தேதி நீர்நிலைகளில் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் ஆடிப்பெருக்கு மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் ஆகியவற்றை  முன்னிட்டு ஆக.3ம் தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அத்துடன் கோட்டை மாரியம்மன் ஆடிப் பண்டிகை திருவிழாவை காண சேலம் மாவட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.