தீபாவளிக்கு முதல் நாள் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோர் கவனத்திற்கு...!!

 
bus

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெளி மாவட்டங்களை சேர்ந்த பலர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் முக்கிய விசேஷ தினங்களில் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து செல்வர். அதேபோல் பண்டிகை தினங்கள் முடிந்த பிறகு மீண்டும் அவர்கள் சென்னையில் வந்தடைவர். இதற்காக அரசு சார்பில் பேருந்து அதிக அளவில் இயக்கப்படும்.  அந்தவகையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி தலைநகர் சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கான பேருந்துகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படுவது வழக்கம்.   தீபாவளி பண்டிகையை ஒட்டி சனி,  ஞாயிற்றுக்கிழமை என வார விடுமுறை நாட்கள் வருவதால் இம்முறை 21ஆம் தேதி பலரும் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.  இதன் காரணமாக அரசு விரைவு பேருந்துகளில் தீபாவளி பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு வசதியானது நேற்றுமுன்தினம்  முதல் தொடங்கியது.

erode bus strike

இந்நிலையில் தீபாவளிக்கு முதல் நாள் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோர், அரசு விரைவுப் பேருந்துகளில் இன்று முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்; www.tnstc.in இணையதளத்தில் பதிவு செய்யலாம். அக்டோபர் 21ம் தேதி பயணம் செய்வதற்கான முன்பதிவு கடந்த 21ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் அக்.22, 23 தேதிகளில் பயணம் செய்ய இன்றும் முன்பதிவு செய்யலாம்.