ஆளுநர் மாளிகை முற்றுகையிட முயற்சி.. திருமாவளவன் உள்ளிட்ட விசிக-வினர் கைது..

 
ஆளுநர் மாளிகை முற்றுகையிட முயற்சி.. திருமாவளவன் உள்ளிட்ட விசிக-வினர் கைது.. 

சென்னை, சின்னமலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து போராட்டம் நடத்திய திருமாவளவன் உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

இந்த ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது.  தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த தொடக்க உரையில் இடம்பெற்றிருந்த  தமிழ்நாடு, பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கருணாநிதி பெயர்களை ஆளுநர் உச்சரிக்கவில்லை. அத்துடன், தமிழ்நாடு அமைத்திப் பூங்காவாக உள்ளது என்கிற வாசகத்தையும் அவர் தவிர்த்துவிட்டார்.  இதற்கு வருத்தம் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், பேரவையிலேயே  கண்டன தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், தேசிய கீதம் இசைப்பதற்கு முன்னதாகவே ஆளுநர், பேரவையைவிட்டு வெளியேறினார். இது பெரும் சர்ச்சையாக நிலையில்,  ஆளுநரின் இந்த செயல்பாட்டுக்கு திமுக கூட்டணி கட்சிகள், மநீம, பாமக, நாதக உள்ளிட்ட கட்சிகளும்  கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.

ஆளுநர் மாளிகை முற்றுகையிட முயற்சி.. திருமாவளவன் உள்ளிட்ட விசிக-வினர் கைது.. 

இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்பப்பெற வலியறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஜனவரி 13 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் முன்கூட்டியே  அறிவித்திருந்தார்.  அதன்படி சென்னை கிண்டியில் தொல். திருமாவளவன் தலைமையில் விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், காங்கிரஸ் சார்பில் போபண்ணா உள்பட நூற்றுகணக்கானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

ஆளுநர் மாளிகை முற்றுகையிட முயற்சி.. திருமாவளவன் உள்ளிட்ட விசிக-வினர் கைது.. 

சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தொல். திருமாவளவன் தலைமையிலான விசிகவினர் , ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் நோக்கில் பேரணியாகச் சென்றனர்.  அப்போது, பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் தொல். திருமாவளவன் மற்றும் விசிகவினரை கைது செய்து அரசுப் பேருந்தில் அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்கள் அனைவரையும்  அருகில் உள்ள மண்டபத்தில் வைத்துள்ளனர்.